
வீட்டிலேயே எளிய ஹேர் பேக் தயாரிக்கும் முறை
முடி உதிர்வு என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை, தவறான உணவு பழக்கம், மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.
இந்த நிலையில், இயற்கை முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கறிவேப்பிலை உதவியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் எளிய முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- கறிவேப்பிலை – 3 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
- தயிர் – 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி, முழுமையாக உலரவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும். பின்னர் காய்ந்த கறிவேப்பிலையை மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து பேக் தயாரிக்கலாம்.
இந்த கலவையை முடியின் உச்சந்தலையிலிருந்து நுனி வரை நன்கு தடவி, சுமார் ஒரு மணி நேரம் வைத்த பிறகு குளிக்கலாம்.
வாரத்திற்கு ஒருமுறை இதை பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவும் என கூறப்படுகிறது.
