
Pakistan நாட்டின் தென்மேற்கு பகுதியான Quetta நகரில் பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த வெடிப்பு காரணமாக ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்ததுடன், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புப் படைகள் வழக்கமாக கண்காணிப்பு மேற்கொள்ளும் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் நொறுங்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
