
நாட்டின் பல பகுதிகளில் நாளை (24) சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
