
டிரம்ப் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டனம்
கிரீன்லாந்துவில் அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை திறந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்தில் அதிக செல்வாக்கை ஏற்படுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.
டென்மார்க்கின் அரை-சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் தூதரக திறப்பு விழாவை புறக்கணித்தனர்.
புதிய தூதரகத்திற்கு வெளியே கூடிய மக்கள் “அமெரிக்காவே இதை நிறுத்து”, “கிரீன்லாந்து மக்களுக்கே சொந்தம்” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரீன்லாந்து அரசு, “இந்த தீவு எங்கள் மக்களுக்கே சொந்தமானது; இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆர்க்டிக் பிராந்திய செல்வாக்கை எதிர்கொள்ள கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மூலோபாய ரீதியாக முக்கியமானது என டிரம்ப் முன்னதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
