
வெள்ளி விலையில் இன்று உயர்வு பதிவு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 15.79 அமெரிக்க டொலர்கள் அல்லது 0.36 சதவீத வீழ்ச்சியாகும்.
இதனிடையே, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.52 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், இது 0.16 அமெரிக்க டொலர்கள் அல்லது 0.21 சதவீத உயர்வைக் காட்டுகிறது.
