
இலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது படிப்படியாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் குறைந்து வருவதாகவும், அண்மைய வானிலை பகுப்பாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்கும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளுக்கும் இனி இந்த வளிமண்டலத் தொகுதியால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக வலுவிழந்ததையடுத்து, இதுதொடர்பான இறுதி வானிலை அறிக்கை இதுவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
