
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என Department of Meteorology Sri Lanka எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள இந்த வளிமண்டல தளம்பல் நிலை, நாளை திங்கட்கிழமை (11)க்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால், தற்போது நிலவி வரும் மழைக்கால வானிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய வானிலை மாற்றங்கள் தென்மேற்கு பருவமழைக்கு முந்திய காலநிலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 20ஆம் திகதி அளவில் நாட்டில் தென்மேற்கு பருவமழை முழுமையாக நிலைபெற வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
