
லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு செயல்முறை வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் என Sri Lanka Cricket வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் Sri Lanka Cricket Official Website என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
மேலும், போட்டிகள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
