
இந்தியக் கடற்படைக்கு உட்பட்ட ‘INS Sindhukesari’ நீர்மூழ்கிக் கப்பல் நேற்று (2026 மே 4) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
அங்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, கப்பலின் செயல்பாட்டைத் தொடர்ந்து பராமரிக்க தேவையான எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், கப்பலில் உள்ள இந்தியக் கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொழில்முறை பயிற்சிகள் மற்றும் சமூக நல்லுறவு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இது இரு நாடுகளின் கடற்படை வீரர்களுக்கிடையில் அனுபவப் பகிர்வையும், பிராந்திய பாதுகாப்பு குறித்த புரிதலையும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியக் கடற்படை குழுவினர் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், முக்கிய சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடவுள்ளனர்.
இவ்விழா விஜயம், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால கலாச்சார மற்றும் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘சிந்துகோஷ்’ (Sindhughosh) வகையைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல், தனது திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்த பின்னர் வரும் நாட்களில் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது.
