இலங்கையின் 2025 ஆம் ஆண்டிற்கான வாகன இறக்குமதி செலவு, நாட்டின் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் 2025 பொருளாதார மீளாய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நீண்டகாலமாக அமலில் இருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி மாதத்திலேயே தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
இதன் பின்னர், பல ஆண்டுகளாக தேங்கியிருந்த தேவைகள் (Pent-up demand) மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மீளுருச்சி காரணமாக வாகன இறக்குமதி வேகமாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான மொத்த இறக்குமதி செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் இந்த உயர்வு வேகமடைந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது
வரலாற்று ஒப்பீட்டில்,
2015 – 2.12 பில்லியன் டொலர்கள் (முதலிடம்)
2018 – 2.09 பில்லியன் டொலர்கள் (இரண்டாம் இடம்)
2025 – 2.04 பில்லியன் டொலர்கள் (மூன்றாம் இடம்)
அந்நியச் செலாவணியில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் பல வரி மற்றும் வரி அல்லாத கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
