
இலங்கையில் மோட்டார் வாகன காப்பீட்டு துறையில் புதிய முன்னேற்றமாக, மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சி, நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் முக்கியமான படியாக கருதப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் காப்பீட்டு அட்டைகளை மாற்றும் இந்த டிஜிட்டல் அட்டை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம், இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
