
சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்றைய 4,734.42 டொலருடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
அதேவேளை, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
