
இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும், காலையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும், மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
