அமெரிக்கா – ஈரான் இடையில் புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை (22) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.

மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில்  ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top