


தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் நடிகர்-இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இன்று திடீரென இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்த இந்த பயணம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நோக்கம் குறித்து இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவர்கள் Colombo நகரில் உள்ள ஒரு நட்சத்திர தரமான ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
