
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், போட்டிக்குப் பிறகு மைதானத்தில் பதிவான ஒரு காணொளி புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அந்தக் காணொளியில், ஐதராபாத் அணியின் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை சிலர் ‘சூனியம்’ எனக் கூறி, சிஎஸ்கே வீரர்களின் விக்கெட்டுகளை பாதிக்க முயற்சி என விமர்சித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிஎஸ்கே நிர்வாகம் ஐதராபாத் அணிக்கு எதிராக புகார் அளித்ததாக கூறப்படும் ஒரு கடிதமும் இணையத்தில் பரவியது. ஆனால், அந்தக் கடிதம் போலியானது என ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில், 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஒரு அணியின் உரிமையாளர் எதிரணியின் உடைமாற்றும் அறையில் இதுபோன்ற மூடநம்பிக்கை சடங்குகளை மேற்கொண்டதாக ஆதாரங்கள் உள்ளன என லலித் மோடி தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
