
தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் ஒரு விமானி இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்துக்கான நிறுவன பொறுப்பதிகாரியான அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோருக்கிடையே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு கடுமையான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதன்போது விமானி தன்னிடம் உடல் தாக்குதல் நடத்தியதாக அமிதாப் அந்தனிபிள்ளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
