புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறையைப் போலவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அந்த நாளில் செயல்படுத்தாமல் இருக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், வாரந்தோறும் புதன்கிழமைகளில் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் மற்றும் விரிவுரைகளையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top