ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக இருந்த “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் முழுமையாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முழு 3 மணி நேர காட்சிகளும் இணையத்தில் வெளியானதால், படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் பைரசிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பதிப்புரிமை மீறலை ஆதரிக்க வேண்டாம் என்றும் கலைஞர்களின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி, இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என கூறி, படக்குழுவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி, இணைய கசிவு படக்குழுவிற்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர்கள் சிபி சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி மற்றும் ஜீவா உள்ளிட்டோரும் பைரசிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, ரசிகர்கள் சட்டவிரோதமாக கசிந்த காட்சிகளை பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இப்படியான செயல்களுக்கு காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் திரையுலகம் வலியுறுத்தியுள்ளது.
