ஹோர்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்துக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு, உலகளாவிய கடல் வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் கடத்தல் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் இத்தகைய மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், அந்தப் பாதையில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.