2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர் சி வேட்பாளராக போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு மூலம் சுந்தர் சி அரசியல் களத்தில் நேரடியாக நுழைகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளது. அதில் மதுரை மத்திய தொகுதிக்கான வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.