பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டண விவரங்களை பொதுமக்கள் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் காட்சிப்படுத்துவது இனி கட்டாயமாகும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் கீழ் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பேருந்து இயக்குநர்களும் இதை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதிப்பத்திரம் ரத்து செய்தல் அல்லது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.