அடர்த்தியான, அழகான புருவம் வேண்டுமா? உங்கள் சமையலறையிலேயே எளிய தீர்வுகள்!

இயற்கையாகவே அடர்த்தியான புருவம் வளர்வதற்கு தேங்காய் எண்ணையையும், விளக்கெண்ணையையும் தினமும் இரவு தூக்க போகும் முன்பு தடவி விட்டு தூங்க வேண்டும்.

சின்ன வெங்காயத்தில் இருந்து எடுத்த சாரை புருவத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடவும். வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் அது முடி வளர்ச்சிக்கு உதவும்.

கற்றாழை ஜெல்லை புருவத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து கழுவி விடலாம். கற்றாழையில் விட்டமின் மற்றும் மினரல் உள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆலிவ் ஆயிலை புருவத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது மாய்ஸ்டரைசராக செயல்பட்டு புருவம் வளர உதவும்.

வெந்தயத்தை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இரவு ஊர வைத்து எடுத்து கொள்ளவும். அதை நன்றாக அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அந்த பேஸ்ட்டை புருவத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி விடவும். வெந்தயத்தில் புரதமும் நிக்கோட்டின் ஆசிடும் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

கிரீன் டீயில் காட்டனை வைத்து முக்கி  எடுத்து, அதை புருவத்தில் தடவி 10 நிமிடம் வைத்து கழுவி விடவும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

  • புருவத்தை மெதுவாக சீவி சீராக பராமரிக்க வேண்டும்.
  • சருமத்தைப் போலவே புருவப் பகுதியையும் அவ்வப்போது எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும்.
  • அதிகமாக திரெடிங் அல்லது வேக்ஸிங் செய்யாமல், தேவையற்ற முடிகளை மட்டும் நீக்கவும்.
  • புருவத்திற்கு கண்டிஷனர் அல்லது சீரம் பயன்படுத்துவதால் அது பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top