
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை முன்னிட்டு, அங்கு கூடுதலாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தகவலை The Wall Street Journal வெளியிட்டுள்ளதுடன், இந்நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpக்கு மேலதிக இராணுவ விருப்பங்களை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தெஹ்ரானுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் கூட, அமெரிக்கா ஒரே நேரத்தில் இராணுவ ரீதியான மாற்று திட்டங்களையும் ஆய்வு செய்து வருவது கவனிக்கத்தக்கதாகும்.