
தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஜோதிகா, தனது திறமையாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்.
ஹிந்தி திரைப்படங்களின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக சில ஆண்டுகள் இடைவெளி எடுத்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஹிந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஜோதிகா நடத்திய புதிய போட்டோஷூட் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. ஸ்டைலிஷ் மற்றும் கிளாசியான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளை குவித்து வருகின்றன.



