
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை குறிவைத்து உடனடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், “ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி மற்றும் எண்ணெய் அமைப்புகள் சட்டபூர்வமான இலக்குகளாக கருதப்படும். அவை கடுமையாக தாக்கப்பட்டு மீள முடியாத சேதம் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய மோதல்கள் தீவிரமடைந்தால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் நீண்ட காலத்திற்கு உயர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் 48 மணி நேரத்திற்குள் மீளப்படாவிட்டால், ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதற்கு பதிலாகவே ஈரானின் இந்த கடுமையான பதில் வெளியாகியுள்ளது.