நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறி விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவாகியுள்ளது. குறிப்பாக Broccoli மற்றும் Cauliflower வகைகளுக்கு அதிக கேள்வி நிலவி வருகிறது.

அதன்படி, Cauliflower ஒரு கிலோ 950 ரூபாய்க்கும், Broccoli ஒரு கிலோ 750 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
மேலும், மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் வகைகள் கிலோவுக்கு 700 ரூபாய்க்கும், பச்சை குடைமிளகாய் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கறிமிளகாய் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 750 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
அதேவேளை, கோவா கிலோவுக்கு 110 ரூபாய்க்கும், கரட் 310 ரூபாய்க்கும், பீட்ரூட் 80 ரூபாய்க்கும், லீக்ஸ் 160 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.