இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி – சர்வதேச சந்தை தாக்கம் பிரதிபலிப்பு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை குறைவு, அதன் நேரடி தாக்கமாக இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்று விலை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளத

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,720 அமெரிக்க டொலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 73.79 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற காரணிகள், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இந்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கமாக, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,626 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இந்த விலை மாற்றம், தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முக்கியமான கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.