
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடு, வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை புதிய வார ஒதுக்கீடு மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
QR முறைமை அறிமுகமானதன் மூலம் நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை சுமார் 20% வரை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன் என பதிவாகியுள்ளது.
எரிபொருள் வரிசைகளை முற்றிலும் நீக்குவதே QR முறைமையின் முக்கிய நோக்கம். இருப்பினும், மசகு எண்ணெய் கிடைப்பதில் சவால்கள் நீடிக்கின்றன.
அதனால், எரிபொருள் சேமிப்பை பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.