
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூலைப் பதிவு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில், பல பகுதிகளில் திரைப்படத்தின் திரையிடல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குள் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.541 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்தியாவில் சுமார் ரூ.337 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.204 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளியீட்டுக்குப் பின்னரான குறுகிய காலப்பகுதியில் இவ்வளவு பெரிய வசூலைப் பதிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
