
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைகின்றது.
நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் கூட்டாண்மை வருமான வரிக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரித் தொகையை இன்றைக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருமான வரி செலுத்த வேண்டியிருந்தும் இதுவரை அதனைச் செலுத்தாத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், இன்று கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்னர் தங்களது வரிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், சட்ட விதிகளுக்கு அமைவாக அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வரி செலுத்துவோர் தங்களது வரிக் கொடுப்பனவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் வரி செலுத்தல் இணையதளம் ஊடாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் நேரடியாகவோ செலுத்த முடியும்.
