
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தமது கட்சி தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
