
பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் மன்னர் சார்ள்ஸ்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்த அவர், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு (First Lord of the Treasury) பதவிகளில் இருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்தார். அதனை மன்னர் ஏற்றுக்கொண்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை மன்னரைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார். அதனை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார். லேடி ஸ்டார்மரையும் மன்னர் சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக அடுத்த தலைவரை மன்னர் அரசை அமைக்க அழைப்பார்.
