தரம் 6 மாணவர்கள் 22 பேர் மருத்துவமனையில் அனுமதி – நச்சு விதை காரணமா?

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் விதைகளை உட்கொண்டதால் சுகவீனமடைந்த 22 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் சூரியன் தெரிவித்ததன்படி, தரம் 6-இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் ஆமணக்கு விதைகளை உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும், 2 மாணவிகளும் அடங்குவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top