மொரட்டுவை பல்கலைக்கழகம் ஜூலை 21 வரை தற்காலிகமாக மூடப்பட்டது

மொரட்டுவை பல்கலைக்கழகம் டெங்கு நோய் பரவல் காரணமாக ஜூலை 21ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல்கலைக்கழக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top