
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடங்கியுள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை தணிப்பது மற்றும் முக்கிய பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
