
ஜமைக்கா கிங்ஸ்டன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி சர்வதேச T20 போட்டியில் இலங்கையை 5 விக்கெட்களால் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள், தொடரை 2–1 என கைப்பற்றியுள்ளது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், 2 பந்துகள் மீதமிருக்கையில் மேற்கிந்தியத் தீவுகள் இலக்கை எட்டியது. இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. துனித் வெல்லாலகே 43 ரன்களும், காமில் மிஷார 28 ரன்களும், பெத்தும் நிஸ்ஸன்க 26 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 20 ரன்களும் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பித்தார்.
பின்னர் பதிலளித்த மேற்கிந்தியத் தீவுகள் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. ஷேர்ஃபேன் ரதஃபர்ட் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். ரோவ்மன் பவல் 33, ஷிம்ரன் ஹெட்மயர் 32, ஜேசன் ஹோல்டர் 21 ரன்கள் பெற்றனர். இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஷமர் ஜோசப் பெற்றுக் கொண்டார்.
