.

உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்ற அவர், 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையையும், போட்டி சாதனையையும் பதிவு செய்திருந்தார்.
இந்தச் சிறந்த செயல்திறனின் மூலம், ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் மொத்தம் 1,324 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை, உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் பத்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
