அடிக்கடி சோர்வும் முடி உதிர்வும் வருகிறதா? கவனிக்க வேண்டிய சத்து குறைபாடுகள்

உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பது மிகவும் அவசியம். ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக பலருக்கு முக்கியமான சத்துக்கள் குறைவாக கிடைக்கின்றன.

இதன் விளைவாக, பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் உருவாகி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்தியாவில் சில முக்கியமான ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகளவில் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அவற்றின் ஆரம்ப அறிகுறிகளையும், அவற்றைத் தடுப்பதற்கு உதவும் உணவுகளையும் பார்ப்போம்.

1. வைட்டமின் D குறைபாடு

அறிகுறிகள்:

  • அதிக உடல் சோர்வு
  • உடலின் பல பகுதிகளில் வலி
  • தசை பலவீனம்

சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • கொழுப்பு நிறைந்த மீன்கள்
  • முட்டை
  • காளான்
  • அதிகாலை சூரிய ஒளி

2. இரும்புச்சத்து குறைபாடு

அறிகுறிகள்:

  • நீடித்த உடல் சோர்வு
  • வெளிறிய சருமம்
  • அதிக முடி உதிர்வு
  • எளிதில் உடையும் நகங்கள்

சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • கீரை வகைகள்
  • பருப்பு மற்றும் பயறு வகைகள்
  • சோயா உணவுகள்
  • ஆடு மற்றும் கோழி ஈரல்

இரும்புச்சத்து நிறைந்த சைவ உணவுகளுடன் வைட்டமின் C நிறைந்த உணவுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்வது சத்துக்கள் உறிஞ்சப்பட உதவும்.

3. வைட்டமின் B12 குறைபாடு

அறிகுறிகள்:

  • கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு
  • அதிக சோர்வு
  • மனக்குழப்பம்
  • ஞாபக மறதி

சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • பால் மற்றும் பால் பொருட்கள்
  • முட்டை
  • ஈரல்
  • மீன் வகைகள்

4. கால்சியம் குறைபாடு

அறிகுறிகள்:

  • இரவு நேர தசைப்பிடிப்பு
  • தசை இழுப்பு
  • எளிதில் உடையும் நகங்கள்

சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • விதைகள்
  • கீரை வகைகள்
  • ராகி
  • கொள்ளு

5. ஜிங்க் (Zinc) குறைபாடு

அறிகுறிகள்:

  • அடிக்கடி சளி, இருமல் போன்ற தொற்றுகள்
  • காயங்கள் தாமதமாக குணமாவது
  • காரணமின்றி முகப்பருக்கள் தோன்றுவது

சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • விதைகள்
  • முந்திரி
  • ஓட்ஸ்
  • ஆடு மற்றும் கோழிக்கறி

உடலில் ஏற்படும் இந்த ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் கவனிப்பது முக்கியம் என வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர். சமச்சீர் உணவுமுறையைப் பின்பற்றி, தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top