
ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம், கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்ததாகவும், தீ பரவிய வேளையில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
