
டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டணங்களை 5 சதவீதம் வரை உயர்த்துமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (04) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் டீசல் விலை 25 ரூபாவால் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பேருந்து உரிமையாளர்கள், தற்போதைய செலவினங்களுடன் தினசரி சேவைகளை முன்னெடுத்துச் செல்வது கடினமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், பேருந்து கட்டணத் திருத்தத்தை அனுமதிக்க வேண்டும் அல்லது தனியார் பேருந்து சேவைகளைத் தொடர எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இறுதி முடிவை எடுப்பதற்காக, போக்குவரத்து அமைச்சருடன் அவசர சந்திப்பொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
