
தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலமானார்.
வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மரணமடைந்த போது அவருக்கு 85 வயதாகியிருந்தது.
மோகினி மணியின் மறைவுச் செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்குமார் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
