நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோகினி மணியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் இந்த இரங்கல் செய்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
