
100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை பதிவு
இந்தியாவின் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாபைச் சேர்ந்த Gurindervir Singh புதிய சாதனை ஒன்றை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற 100 மீட்டர் அரையிறுதி போட்டியில், அவர் 10.09 வினாடிகளில் இலக்கை கடந்தார்.
இதன் மூலம் தனது முந்தைய சாதனையான 10.17 வினாடிகளை அவர் முறியடித்ததுடன், மற்ற போட்டியாளர்களின் முன்னைய சாதனைகளையும் தகர்த்தார்.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் அதிவேகமாக ஓடி இலக்கை எட்டியதன் மூலம், “இந்தியாவின் அதிவேக மனிதர்” என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த சாதனை இந்திய தடகளத் துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
