
சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை குறைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக வெளிநாடுகளில் இருந்து கீரி சம்பா அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த மாதம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதன் விளைவாக, பெரும் போக அறுவடையை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
