
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வந்தவுடன் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 125 ரூபாவாலும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் உயர்ந்துள்ளமை இந்த விலை அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
