தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு : நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,545.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 76.53 டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போதைய சர்வதேச விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் வலுவூட்டலும், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top