
Kazakhstan அரசு, Iran நாட்டிற்கு 30 தொடருந்து பெட்டிகள் மூலமாக மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக தஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் Israel உடனான நீண்டகால மோதல்களால் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கசக்ஸ்தான் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அனுப்பப்பட்ட இந்த உதவிப் பொருட்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சீனி, மாவு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளன.
இந்த மனிதாபிமான உதவிகள் ஈரானின் சரக்சு தொடருந்து நிலையத்தில் வைத்து ஈரான் செம்பிறை சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் தற்போது கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஈரானின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டின் வருடாந்த பணவீக்கம் 53.7 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 115 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
