இந்தியா–இலங்கை உறவை வலுப்படுத்துவோம்:தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள Vijay அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அவர் இந்த வாழ்த்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் உறவுகள் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா – இலங்கை உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு தரப்புக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வலுவான இந்தியா – இலங்கை கூட்டாண்மையின் கீழ், மேலும் செழிப்பும் முன்னேற்றமும் நோக்கி இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறுதியாக, விஜய்க்கும் தமிழக மக்களுக்கும் இலங்கை மக்களின் சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top