
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கு முன்பாகவே திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
